"கொரோனா எதிரொலி".. மீண்டும் கட்டுப்பாடுகள் அமுல்.. வெளியான பரபரப்பு தகவல்..!!!

Keerthi
2 years ago
"கொரோனா எதிரொலி".. மீண்டும் கட்டுப்பாடுகள் அமுல்.. வெளியான பரபரப்பு தகவல்..!!!

கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால் அபுதாபியில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் அபுதாபியில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அபுதாபி அவசரம், நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை கமிட்டி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "அமீரகத்தில் கொரோனா பரவல் அதிகரிப்பு மற்றும் உலகெங்கும் ஒமிக்ரான் வைரஸ் காரணமாக சுகாதார முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக அபுதாபி முழுவதிலும் விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதாவது அபுதாபி நகரில் உள்ளரங்கு மற்றும் திறந்தவெளியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் புதிய கட்டுப்பாட்டு விதிமுறைகள் அறிவிக்கப்படுகிறது.

அதன்படி அபுதாபியில் நடைபெறும் சமூக நிகழ்ச்சிகள், திருமண விழாக்கள், குடும்ப நிகழ்ச்சிகள், இறுதிச்சடங்கு போன்றவைகளில் பங்கேற்க அதிகபட்சமாக 60 சதவீதம் பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். இதனையடுத்து உள்ளரங்கு நிகழ்ச்சிகளில் அதிகப்பட்சமாக 50 பேர் மட்டும் பங்கேற்க அனுமதி அளிக்கப்படுகிறது. அதேபோன்று திறந்தவெளியில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் அதிகப்பட்சமாக 150 பேர் பங்கேற்கலாம். சமூக நிகழ்ச்சிகளில் அதிகபட்சம் 30 பேர் மட்டுமே பங்கேற்க அனுமதி வழங்கப்படுகிறது. பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பவர்கள் கட்டாயம் அல் ஹொசன் செயலியில் ஒளிரும் கிரீன் பாசை காண்பித்து உள்ளே செல்ல வேண்டும்.

அதேபோன்று கிரீன் பாஸ் இல்லாதவர்கள் 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா பரிசோதனை முடிவுகளை கையில் எடுத்து செல்ல வேண்டும். அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிந்திருக்க வேண்டும். சமூக இடைவெளியுடன் கட்டிபிடித்து நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும். இதனிடையில் அனைத்து நிகழ்ச்சிகளும் அதிகாரிகளால் கண்காணிக்கப்படும். மேலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் சரியாக பின்பற்றப்பட்டுள்ளதா என்று ஆய்வு மேற்கொள்ளப்படும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.